Wednesday, 02 August 2017 16:49

கேப்டன் கோலிக்கு நன்றி தெரிவித்துள்ள பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)
கேப்டன் கோலிக்கு நன்றி தெரிவித்துள்ள பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி! கேப்டன் கோலிக்கு நன்றி தெரிவித்துள்ள பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி! கேப்டன் கோலிக்கு நன்றி தெரிவித்துள்ள பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி!

புதுடெல்லி(02 ஆகஸ்ட் 2017): இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிரடி வீரர் அஃப்ரிடி நன்றி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடியின் தொண்டு நிறுவனத்துக்கு, இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது பேட் ஒன்றினை பரிசாக அளித்துள்ளார்.

இதுதொடர்பாக விராட் கோஹ்லிக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஷாகித் அஃப்ரிடி, உங்களைப் போன்ற நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உதவியுடன் தொண்டு நிறுவனத்தின் பணி அனைவருக்கும் சென்றடையும் என்று தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி கையெழுத்திட்டுள்ள அந்த பேட்டின் புகைப்படத்தையும் அஃப்ரிடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அஃப்ரிடியின் இந்த பதிவுக்கு வரவேற்புத் தெரிவித்துள்ள கோஹ்லி, தொண்டு நிறுவனத்துக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ஷாகித் அஃப்ரிடிக்கு இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்ட விராட் கோஹ்லியின் ஜெர்ஸி ஒன்று பரிசளிக்கப்பட்டது.

அஃப்ரிடியின் தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டும் வகையில் லண்டனில் ஏலம் விடப்பட்ட அந்த ஜெர்ஸி, ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

Former Pakistani cricketer Shahid Afridi was all in awe of Indian skipper Virat Kohli for donating a signed bat for the Shahid Afridi Foundation.

Read 473 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.