Friday, 04 August 2017 20:48

இந்திய ஹாக்கி வீராங்கனை மர்ம மரணம்: கொலையா? Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

அரியானா(04 ஆகஸ்ட் 2017): இந்திய ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது குடும்பத்தினர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச ஆக்கி வீராங்கனை ஜோதி குப்தா. இந்திய அணியில் முன்கள வீராங்கனையாக விளையாடி வருகிறார். ஆசிய போட்டியில் விளையாடி உள்ளார்.

20 வயதான அவர் கடந்த 2-ந்தேதி ரோடாக்கில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சான்றிதழில் உள்ள பெயர் எழுத்து பிழைகளை சரி செய்ய செல்வதாக பெற்றோரிடம் கூறியபடி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர் ரெவாரி ரெயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். ஜோதி குப்தா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படும் நிலையில் அவரது குடும்பத்தால் ஜோதி குப்தா கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Read 482 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.