பவுன்சர் பந்து தாக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பலி! Featured

By இந்நேரம் August 17, 2017 565

இஸ்லாமாபாத்(17 ஆகஸ்ட் 2017): ஹெல்மேட் போடாமல் விளையாடிய பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் ஜுபைர் அஹமது பவுன்சர் பந்து தாக்கியதில் மரணமடைந்துள்ளார்.

18 வயதான ஜுபைர் பாகிஸ்தான் உள்ளூர் கிளப் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் கிளப் அணிகள் இடையிலான போட்டியின்போது ஹெல்மெட் அணியாமல் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டதால், அவர் உயிரிழக்க நேரிட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவுசெய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் விளையாட்டின்போது பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை நினைவுபடுத்தி இருப்பதாகவும், ஜுபைரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி கிரிக்கெட் வர்ணணையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான டீன் ஜோன்ஸ், தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியினரின் பயிற்சிப் போட்டியின்போது இதேபோல பவுன்சர் பந்து தாக்கியதில் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த அந்த போட்டியின் போது காயமடைந்த வார்னர், உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

 

Rate this item
(0 votes)