உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சிந்து! Featured

By இந்நேரம் August 27, 2017 515

ஸ்காட்லாந்து(27 ஆகஸ்ட் 2017): உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சிந்து முன்னேறியுள்ளார்.

ஸ்காட்லாந்து நாட்டின் க்ளாஸ்கோவ் நகரில், உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பி.வி சிந்து ஆகியோர் உலக சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர். நேற்று மாலை நடந்த முதலாவது அரையிறுதியில் சாய்னா தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் நள்ளிரவில் நடந்த இரண்டாவது அரையிறுதியில், இந்தியாவின் பி.வி சிந்து சீனா வீராங்கனையை எதிர்கொண்டார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில், முதல் செட்டை 21-13 என்று கணக்கில் எளிதாக கைப்பற்றினார். இரண்டாம் செட்டிலும் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பி.வி சிந்து 21-10 என்று கணக்கில் எளிதாக கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் சிந்து உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டியில், சாய்னாவை தோற்கடித்த ஜப்பானின் நசோமி ஒக்குஹாராவை நாளை எதிர்கொள்கிறார்.

Olympic silver medallist PV Sindhu assured India of a silver medal after reaching the final of the World Championship with a straight game win over World No 10 Chen Yufei in women's singles, here on Saturday.

Rate this item
(0 votes)