பல கோடி வருமானம் தரும் குளிர் பான விளம்பரத்தை உதறிய விராட் கோலி - குவியும் பாராட்டுகள்! Featured

By இந்நேரம் September 15, 2017 632

புதுடெல்லி(15 செப் 2017): பல கோடி வருமானம் தரக்கூடிய பெப்சி விளம்பரத்தை உதறியுள்ளார் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளங்கும் விராட் கோலி, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரராக திகழ்ந்து வருகிறார். முன்னணி வீரராக வளர வளர தனது உடற்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தினார்.

எந்ததெந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், எந்தெந்த குளிர்பானங்களை குடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். இதனால் தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் முன்னணி உடற்கட்டுப்பாட்டு வீரராக திகழ்கிறார்.

இந்நிலையில் விராத் கோஹ்லி பலகோடி ரூபாய் பெறுமான PEPSI குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை மறுத்துள்ளார். "உடலுக்குக் கேடு விளைவிக்கும் காற்றடைத்த பானத்தை நான் அருந்துவதில்லை. நான் செய்யாத ஒன்றைப் பிறருக்கு பரிந்துரை செய்ய மாட்டேன்!" என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். கடந்த காலத்தில் PEPSI விளம்பரங்களில் நடித்த தவறை உணர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் பாரத் ரத்னா டெண்டுல்கர் போன்ற நடசத்திர வீரர்கள் கூட எடுக்காத அதிரடி முடிவை கோலி எடுத்திருப்பதற்கு பலரும் பாரட்டு தெரிவித்து வருகின்றனர்.

India skipper Virat Kohli, who has been making the headlines for all the right reasons as his bat does the talking for him, once again grabbed eyeballs by making a move that can inspire a generation. According to a report in The Hindu, the Indian skipper had turned down a multi-crore soft drink

Rate this item
(0 votes)