Thursday, 19 October 2017 13:40

கிரிக்கெட்: இன்ஜமாம் குடும்பத்திலிருந்து இன்னொரு அதிரடி வீரர்! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

அபூதாபி(19 அக் 2017): பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்ஜமாம் உல் ஹக் மருமகன் இமாம் உல் ஹக் (21) தனது முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

அபுதாபியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 125 பந்துகளில் 100 ரன்களை கடந்து முதல் போட்டியிலேயே சதமடித்த பாகிஸ்தானின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் சலீம் இலாஹி 1995 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக முதல் போட்டியில் சதமடித்துள்ளார்.

முன்னதாக இலங்கை அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் பிடித்த பாகிஸ்தான் அணி இமாம் உல் ஹக் சதத்துடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Young opener Imam-ul-Haq, nephew of Pakistan great Inzamam-ul-Haq, smashed a hundred on debut to guide his side to a seven-wicket win in the third one-day international against Sri Lanka.

Read 575 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.