Thursday, 26 October 2017 06:14

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 போட்டியில் ஆட்டோ டிரைவர் மகனுக்கு வாய்ப்பு! Featured

Written by இந்நேரம்
Rate this item
(1 Vote)

ஐதராபாத்(26 அக் 2017): நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 கிரிக்கெட் போட்டியில் பிசிசிஐ அணியில் ஐதராபாத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகன் முஹம்மது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி பிசிசிஐ அணி ஒருநாள் தொடர் முடிந்தவுடன் டி.20 போட்டியில் விளையாடவுள்ளது. இதில் பிசிசிஐ அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் ஆகிய 2 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முகமது சிராஜ் ஆட்டோ டிரைவரின் மகன் ஆவார். 23 வயதான அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆவார்.

முகமது சிராஜ் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். அவர் ரூ.2.6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு இருந்தார். முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு பிசிசிஐ அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

The Indian selectors decided to bring in Shreyas Iyer and Mohammed Siraj for the T20I series against New Zealand. Virat Kohli will lead the team as expected and Ashish Nehra will be a part of the squad only for the first T20I against the Kiwis as he retires at the Ferozeshah Kotla.

 

Read 1046 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.