Saturday, 04 November 2017 17:30

இண்டிகோ விமான ஊழியர் மீது பி.வி.சிந்து பரபரப்பு குற்றச்சாட்டு! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

புதுடெல்லி(04 நவ 2017): இண்டிகோ விமான ஊழியர் தன்னுடன் கடுமையாக நடந்துகொண்டதாக பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

பாட்மிண்டன் உலக தரவரிசையில் பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அவரது ட்விட்டர் பக்கத்தில் இண்டிகோ விமான பணியாளரான அஜீதேஷ் என்னிடம் மிக மோசமான மற்றும் கடுமையான முறையில் நடந்து கொண்டார். விமான பணிப்பெண் ஆசிமா அவரிடம் பயணியிடம் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். ஆனால், ஆசிமாவிடமும் அவர் கடுமையுடன் நடந்து கொண்டுள்ளார். இதுபோன்ற மக்கள் இண்டிகோ போன்ற ஒரு மதிப்பு நிறைந்த விமான நிறுவனத்தில் பணிபுரிவது அதன் மதிப்பினை அழித்துவிடும் என தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து சிந்துவின் தந்தை ரமணா கூறும்போது, ''சிந்துவின் விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பையை விமான ஊழியர் கடுமையாக கையாண்டார். சிந்து அவரிடம் அதில் பாட்மிண்டன் பொருட்கள் உள்ளது என்று கூறியும் அவர் கடுமையாக நடந்து கொண்டார். இது சிந்துவை காயப்படுத்தியது . அதன் காரணமாகவே அவர் ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார்'' என்றார்.


Ace shuttler PV Sindhu took to Twitter to express her anger over the 'rude' behaviour of an airline ground staff over her kit bag when she was flying to Mumbai on Saturday.

Read 308 times Last modified on Saturday, 04 November 2017 17:13
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.