பிரபல கிரிக்கெட் வீரர் இறந்ததாக வந்த தகவல்: அதிர்ந்த ரசிகர்கள்! Featured

By இந்நேரம் November 30, 2017 571

இஸ்லாமாபாத்(30 நவ 2017): பாகிஸ்தான் பிரபல கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பயிற்சியாளருடன் மோதலால் பாகிஸ்தான் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள பேட்ஸ்மேன் உமர் அக்மல் இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

அதில் அல்ஹம்துலில்லாஹ் நான் நலமாக உள்ளேன் சமூக வலைதளத்தில் என்னை பற்றி வந்த தகவல்கள் எல்லாமே தவறானவை. அதை யாரும் நம்ப வேண்டாம். இது போன்ற வதந்திகளை தயவு செய்து யாரும் பரப்பாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

"As salaam alaikum guys. By the grace of Allah I am safe. All the news doing the rounds is fake. You will see me live at the semi-finals. And I request everyone not to spread news like this. Thank you very much." Akmal said in his video message.

Allhamdulillah I am safe n perfectly fine in Lahore all news coming from social media is fake
And Insha Allah I will join #National20cup2017 #Semifinale
— Umar Akmal (@Umar96Akmal) November 27, 2017

Rate this item
(0 votes)