மனைவியுடன் கோவிலில் சாமி கும்பிட்ட கிரிக்கெட் வீரர் ஜாஹிர்கான்! Featured

By இந்நேரம் December 05, 2017 750

புதுடெல்லி(05 டிச 2017): கிரிக்கெட் வீரர் ஜாஹிர்கான் அவரது மனைவியும் நடிகையுமான சகரிகா காடேஜுடன் டெல்லி கோல்காபூர் மகாலட்சுமி கோவிலில் சாமி கும்பிட்டார்.

பிசிசிஐ அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாஹீர்கான் பிரபல திரைப்பட நடிகையான சகரிகா காடேஜை திருமணம் செய்து உள்ளார். இவர்களது திருமணம் கலப்பு திருமணமாகும். திருமணம் முடிந்த பிறகு புதுமண தம்பதிகள் ஜாகீர்கான் அவரது மனைவி சாகரிகா காட்ஜ் புதுடெல்லி கோல்காபூர் மகாலட்சுமி கோவிலுக்கு சென்றனர். அங்கு இருவரும் சாமி கும்பிட்டனர். அங்கு ஜாகீர்கான் தனது நெற்றியில் குங்கும பொட்டு வைத்துக் கொண்டார்.

ஜாகிர்கான் நெற்றியில் பொட்டு வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவியதால், `இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் எப்படி பொட்டு வைக்கலாம்' என சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் உண்மைக் காதலுக்கு மதமாற்றம் தேவை இல்லை. இருவருமே பரஸ்பரம் அவரவர் மதங்களுக்கும் நம்பிக்கைக்கும் மரியாதை அளித்தாலே போதுமானது. அந்த வகையில், தன் வாழ்க்கைத் துணைவியின் நம்பிக்கையை மதித்து ஜாகீர்கான் மதித்து பொட்டு வைத்துள்ளார். என்று சிலர் அவருக்கு ஆதரவு குரலும் எழுப்பியுள்ளனர்.


Cricketer Zaheer Khan's interfaith marriage with actress Sagarika Ghatge and visit Delhi Mahalakshmi temple.

 

Rate this item
(0 votes)
Last modified on Tuesday, 05 December 2017 21:42