Sunday, 07 January 2018 11:37

அதிரடி கிரிக்கெட் வீரரின் இன்றைய பரிதாப நிலை! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

கொழும்பு(07 ஜன 2018): உலக பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பந்து அதிரடி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா கால் முட்டு வலியால் அவதியுறுகிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஓய்வு பெற்ற அதிரடி வீரர் ஜெயசூர்யா. அந்த அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களின் அதிரடி ஆட்டத்தில் டெண்டுல்கருக்கு நிகராக போற்றப்பட்டவர்.

இவர் தற்போது கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஊன்றுகோல் உதவியால் ஜெயசூர்யா நடந்து வருகிறார். ஊன்றுகோலுடன் அவர் நடப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓய்வுக்குப் பின்னர் இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை அவர் வகித்து வந்தார். இலங்கைக் கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழுத் தலைவராகவும் ஜெயசூர்யா பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read 512 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.