Tuesday, 09 January 2018 20:17

குத்துச்சண்டை போட்டியில் நிகாத் ஜரீன் அடுத்த நிலைக்கு தகுதி! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

ரோஹ்டாக்(09 ஜன 2018): தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டியில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நிகாத் ஜரீன் அடுத்த நிலைக்கு தகுதி பெற்றுள்ளார்.

முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான நிகாத் ஜரீன் காயம் காரணமாக சில வருடங்கள் குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் ரோஹ்டாக்கில் நடைபெற்ற தேசிய அளவிலான எலைட் பெண்கள் குத்துச் சண்டை போட்டியில் நிகாத் ஜரீன் கேரளாவை சேர்த அஞ்சு சாபுவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த நிலைக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதுகுறித்து நிகாத் ஜரீன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்," இந்த வெற்றி எனக்கு மிகவும் மகிழ்சி அளிக்கிறது. காயம் காரணமாக சில வருடங்கள் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த நிலையில் இந்த வெற்றி எனக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இனி தொடர்ந்து வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது." என்றார்.

சாதாரண குடும்பத்தை சேர்ந்த நிகாத் ஜரீனின் தந்தை முஹம்மது ஜமீல் அஹமது கடந்த 2002 ஆம் ஆண்டு குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி விளையாட்டுப் போட்டிகளில் மகள் நிகாத் ஜரீனை ஈடுபடுத்தினார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு துருக்கியில் நடைபெற்ற உலக ஜூனியர் குத்துச் சண்டை போட்டியில் நிகாத் ஜரீன் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.


Former World Junior Champion Nikhat Zareen advanced to the next round of the second Elite Women’s National Boxing Championship in Rohtak on Monday.

 

Read 288 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.