Tuesday, 09 January 2018 21:32

அதிரடி கிரிக்கெட் வீரர் யூசுப் பத்தானுக்கு இடைக்கால தடை! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

புதுடெல்லி(09 ஜன 2018): பிசிசிஐ அணியின் அதிரடி வீரர் யூசுப் பத்தான் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த மார்ச் 16-ம் தேதி உள்நாட்டு டி20 தொடரின் போது யூசுப் பத்தான் பிசிசிஐ ஊக்கமருந்து தடுப்புச் சோதனைக்காக சிறுநீர் மாதிரியை அளித்திருந்தார். பரிசோதனையில் டெர்புடலைன் என்ற ஊக்க மருந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது இதனையடுத்து பத்தானுக்கு ஐந்து மாதங்கள் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே தனக்கு பரிந்துரை செய்யப்பட்ட இருமல் மருந்தில் டெர்புடலைன் உள்ள மருந்து தவறாகக் கொடுக்கப்பட்டதாக யூசுப் பத்தான் பிசிசிஐ யிடம் விளக்கம் அளித்துள்ளார். இதனை கேட்டறிந்த பிசிசிஐ இதுகுறித்து பரிசிலித்து வருகிறது.

பொதுவாக பத்தான் விளையாட்டில் நேர்மையை கடைபிடிக்கக் கூடியவர். இதுபோன்ற தவறுகளை அவர் வேண்டுமென்றே செய்திருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

பிசிசிஐ அணியில் அவர் புறக்கணிக்கப்பட்டாலும், ஐபிஎல் மற்றும் இதர உள்ளூர் போட்டிகளில் பத்தான் விளையாடி வருகிறமை குறிப்பிடத்தக்கது.


All-rounder Yusuf Pathan has been suspended by the Board of Control for Cricket in India (BCCI)

Read 420 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.