கிரிக்கெட் வீரர் பந்துவீச்சின்போது மயங்கி விழுந்து மரணம்! Featured

By இந்நேரம் January 27, 2018 420

ஐதராபாத்(27 ஜன 2018): உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பங்கேற்று விளையாடியபோது லாயிட் அந்தோனி என்ற கிரிக்கெட் வீரர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் இரவு போட்டியில் 24 வயது லாயிட் அந்தோனி பந்து வீசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக வீரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாகவே அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Rate this item
(0 votes)