ஐ.பி.எல்: ஏழை வீரர் செய்யது கலீல் ரூ 3 கோடிக்கு ஏலம்! Featured

By இந்நேரம் January 29, 2018 1088

ஐதராபாத்(29 ஜன 2018): ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஏழை குடும்பத்தை சேர்ந்த வீரர் செய்யது கலீல் அஹமது ரூ 3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானை சேர்ந்த செய்யது கலீலின் குடும்பம் மிகவும் ஏழை குடும்பமாகும், அவரது தந்தை கம்பவுண்டராக பணிபுரிந்து குறைந்த வருமானம் ஈட்டுபவர்.

செய்யது கலீல் தனது திறமையால் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பெற்றார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற செய்யது முஸ்தாக் அலி டி.20 போட்டியில் பங்குபெற்று சிறப்பாக விளையாடினார். டெல்லி டேர் டெவில் அணிக்காக இரண்டு சீசன்களில் விளையாடியுள்ளார். எனினும் அவரது திறமைக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக ரூ 3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்யது கலீல் அஹமது மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Sunrisers Hyderabad picked Syed Khaleel Ahmed for IPL 2018. He bagged Rs. 3 crore at the auction.

Rate this item
(0 votes)