ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பிசிசிஐ இறுதிப்போட்டிக்கு தகுதி! Featured

By இந்நேரம் January 30, 2018 346

நியூசிலாந்து(30 ஜன 2018): ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் பிசிசிஐ அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

நியூசிலாந்தில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் பிசிசிஐ பாகிஸ்தானை சந்தித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், பிசிசிஐ 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுபம் கில், 102 ரன்கள் விளாசி நாட்அவுட்டாக களத்தில் நின்றார். மன்ஜோத் கல்ரா 47, பிருத்வி ஷா 41 ரன்கள் விளாசினர். இதையடுத்து, 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் அண பிசிசிஐ அணியில் அபார பந்து வீச்சில் 69 ரன்களில் ஆல்அவுட்டானது. எனவே 203 ரன்கள் வித்தியாசத்தில் பிசிசிஐ அணி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து சனிக்கிழமை நடைபெற உள்ள பைனல் போட்டியில், பிசிசிஐ அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Rate this item
(0 votes)