கோஹ்லியின் கோபம் எனக்கு பிடிக்கும்: ஷாஹித் அஃப்ரிடி! Featured

By இந்நேரம் February 10, 2018 303

புதுடெல்லி(10 பிப் 2018): ஆடுகளத்தில் கோஹ்லியின் கோபம் எனக்கு பிடிக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

சுவிட்சார்லாந்தில் நடைபெற்று வரும் ஐஸ் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வரும் அப்ரிடி, செய்தியாளர்களிடம் பேசும்போது, “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி செயல்பாடு அபாரமாக உள்ளது. கடந்த காலங்களில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் தடுமாறுவதைதான் பார்த்து இருக்கிறோம். ஆனால், தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தி வருகிறது.

தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விராட் கோலி உள்ளார். களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் விராட் கோலியின் அணுகுமுறை என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. எனது தொண்டு நிறுவனத்துக்காக பேட்,ஜெர்சி ஆகியவற்றை விராட் கோலி தொடர்ந்து வழங்கி வருகிறார்" என்றார்.

Rate this item
(0 votes)