சன் டிவியின் குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சிக்கு ஆபத்து? Featured

By இந்நேரம் September 01, 2016 1290

திருவனந்தபுரம்(01 செப் 2016): சன் டிவியின் குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சி போன்ற கேரளாவின் குட்டிப் பட்டாளம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சன் குழுமத்தின் மலையாள சேனல் சூர்யா டிவி. இந்த சேனலில் இமான் அண்ணாச்சி தமிழில் நடத்தும் குட்டிச் சுட்டீஸ் போன்று கேரளாவில் சூர்யா டிவியில் ஒளிபரப்பாகி வந்த குட்டி பட்டாளம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகளிடம் வயதுக்கு மீறிய கேள்விகள் கேட்கப்படுவதோடு, இரட்டை அர்த்த வசனங்களும் இதில் இடம்பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறுவர் நல ஆணையத்தின் நடவடிக்கையால் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகளிடம் வயதுக்கு மீறிய கேள்விகள் கேட்கப்படுவதோடு, சில குடும்ப ரகசியங்களையும் பொதுவில் விவாதிப்பதாக குற்றச்சாட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rate this item
(0 votes)
Last modified on Thursday, 01 September 2016 03:12