ஈழத்துக் குயில் சிறுமியை ஏமாற்றிவிட்டதா ஜீ.தமிழ் டிவி? டிசாதனாவின் இனிய குரல்(வீடியோ) Featured

Wednesday, 10 May 2017 09:28 Written by  இந்நேரம் Published in தொலைகாட்சி Read 1418 times

சென்னை(10 மே 2017): ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் ஈழத்துக் குயில் சிறுமி டிசாதனாவை ஏமாற்றி விட்டதாக சமூக வலைதளங்களில் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெறும் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பலசுற்றுகளில் சிறப்பாக பாடி இறுதிப் போட்டியை எட்டிய சிறுமி டிசாதனா, ஆரம்பத்தில் அப்படி எதுவும் சங்கீதம் தெரியாதவராக இருந்தார். எனினும் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு பயிற்சி பெற்று அனைத்து ரவுண்டுகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தார்.

சிறுமி டிசாதனா இறுதிப் போட்டியில் பாடிய பாடல் வீடியோ

இவருக்கே முதல் பரிசு கிடைக்கும் என்று எதிர் பார்க்கப் பட்ட நிலையில் கர்நாடகாவை சேர்ந்த தமிழ் தெரியாத சிறுவனுக்கு முதல் பரிசு வழங்கப் பட்டது. தமிழ் பெண்ணான ஈழத்துக் குயில் டிசாதனாவுக்கு இரண்டாவது பரிசு வழங்கி ஜீ தமிழ் துரோகம் செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஜீ தமிழ் என்றில்லை பெரும்பாலான தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகின்றனர் என்ற குற்றச்சாட்டே ஒலிக்கின்றது.

அதேவேளை டிசாதனா முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை என்பதாலும் சில நுணுக்கங்கள் அவருக்கு தெரியவில்லை என்றும் உச்சரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் அதேவேளை அவர் குரலின் இனிமையின் காரணமாகவே இறுதிப் போட்டி வரை வந்தார் என்றும் முதல் பரிசை தட்டிச் சென்ற கர்நாடக சிறுவன் உண்மையில் திறமையானவர் என்று சங்கீதம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Last modified on Wednesday, 10 May 2017 09:42
Comments   
0 #1 Rasalingam 2017-06-28 06:15
I would like to send an English grammar book to Disathana. Please let me know her contact details.. - Rasalingam (Australia)
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.