உண்மையை மறைக்கும் விஜய் டிவி; விளாசும் இயக்குநர்! Featured

Saturday, 10 June 2017 06:02 Written by  இந்நேரம் Published in தொலைகாட்சி Read 805 times

சென்னை(10 ஜூன் 2017): கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் உண்மையான இயக்குநர் பெயரை விஜய் டி.வி. மறைப்பதாக அதன் ஆரம்பகால இயக்குநர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்," விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் வரலாறு தெரியாமல் விஜய் டி.வி உண்மையை மறைக்கப் பார்க்கிறது. காமெடி நடிகர்களுக்கு கோட்டு, சூட்டு போட்டு அழகு பார்த்தவன் நான். அவர்களை ஊர் ஊராக அலைந்து திரிந்து கண்டெடுத்து விதை போட்டவன் யார் என்று உலகுக்கே தெரியும். அப்படிப்பட்ட என் பெயரை மறைப்பது உங்களுக்கு அழகல்ல" என்று தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியிலிருந்து பிரிந்து பின்பு சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்று நிகழ்ச்சி நடத்தி புகழ் பெற்றவர் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.