பிக்பாஸ் ஜூலியின் குட்டு உடைபட்டது! Featured

By இந்நேரம் July 04, 2017 1412

சென்னை(04 ஜூலை 2017): விஜய் டி.வியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முக்கிய நபரான ஜூலி ஒரு நடிகை என்ற குட்டு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டி.வி. நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் இதில் பங்கேற்றுள்ள ஜல்லிக்கட்டு போராட்ட நாயகி ஜூலி எந்தவித பின்புலமும் இல்லாதவர் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது.

ஆனால் அவர் ஏற்கனவே நடித்த ஒரு ஆல்பம் ஒன்று வெளியாகி அவர் ஒரு நடிகை என்பதை காட்டியுள்ளது. இதனை ஜூலியே மறைத்தாரா? அல்லது விஜய் டிவி மறைத்துள்ளதா? என்பதே இப்போதைய கேள்வி.

இதற்கிடையே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றிருக்க இவர் மட்டு சமூக வலைதளங்களில் ஹைலைட் ஆன பின்னணி குறித்தும் பலரும் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

Rate this item
(0 votes)