பிக்பாஸ் காயத்ரி ரகுராமுக்கு எதிராகவும் விஜய் டிவிக்கு எதிராகவும் வழக்கு! Featured

Wednesday, 12 July 2017 10:30 Written by  இந்நேரம் Published in தொலைகாட்சி Read 473 times

சென்னை(12 ஜூலை 2017): பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாதி ரீதியாக சிலர் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராகவும், விஜய் டி.விக்கு எதிராகவும் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் முடிவெடுத்துள்ளனர்.

விஜய் டிவியில் சமீபத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் அதிகார தோரனையுடனும், தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தியும் வருவதாக தெரிகிறது. மேலும் எச்ச , சேரி பிஹேவியர் போன்ற வார்த்தைகளை அவர் உபயோகப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பட்டியல் சாதி மக்களை வார்த்தை ரீதியாக இழிவு படுத்துவது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 கீழ் வழக்குப் பதிவு செய்யும் வகையிலும் மேலும் விஜய் டிவி மீதும் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.