பிக் பாஸில் இந்த வார டார்கெட் ஜூலி! Featured

Tuesday, 25 July 2017 16:53 Written by  இந்நேரம் Published in தொலைகாட்சி Read 385 times

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை வெறுப்பவர்கள் கூட அது குறித்தே பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை மறுக்க இயலாது.

அந்த நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களின் மகிழ்ச்சி, அழுகை, ஆனந்தம், கோபம், சண்டை ஆகியவற்றிற்கு, பார்வையாளர்கள் தங்களின் எதிர்வினையைச் சமூக ஊடகங்களில் பதிவுசெய்துவருகின்றனர். நடிகை ஓவியாவுக்கான ஆதரவை எல்லா மட்டங்களிலும் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வாரம் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதற்கான நபராக ஓவியா சகப் போட்டியாளர்களால் பரிந்துரை செய்யப்பட்டாலும், பொதுமக்களின் வாக்குகளால் நிகழ்ச்சியில் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.

ஆனால் ஆரம்பத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜூலி கடந்த வாரங்களில் அவரது நடவடிக்கைகளால் பொதுமக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். ஆனால் போட்டியாளர்களில் சிலர் ஜூலி தவறேதும் செய்யவில்லை என்பதாக நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் ஜூலி சொன்ன பொய் தற்போது சிலருக்கு தெரிய வந்து ஓவியவை ஒதுக்கியவர்கள் ஓவியாவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அதேவேளை ஜூலி வரும் வாரங்களில் ஒதுக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

Last modified on Tuesday, 25 July 2017 16:55
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.