ஓவியாவை வைத்து நாடகமாடுகிறதா விஜய் டி.வி? Featured

Saturday, 05 August 2017 19:48 Written by  இந்நேரம் Published in தொலைகாட்சி Read 588 times

சென்னை(05 ஆகஸ்ட் 2017): விஜய் டி.வி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா மீண்டும் கலந்துகொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஓவியாவைப் பற்றிய சில தகவல்களை விஜய் டிவி வெளியிட வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் மீண்டும் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதோடு, ஓவியா முன்னிலையில் நடிகர் கமலும் இதுகுறித்து விளக்கம் அளிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதை அடுத்து ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய விஜய் டிவிதரப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாரு ஓவியாவை கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் ஓவியா விஜய் டிவியின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளதாகவும், அதேவேளை அவர் விரும்பும் பட்சத்தில் பிக்பாசை விட்டு அவர் இன்று வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இது ஒரு விளையாட்டு என்றும், டி.ஆர்.பிக்காக விஜய் டி.வி ஓவியாவை வைத்து நாடகமாடுகிறது என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.