பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகல்: நடிகர் கமல் அதிரடி! Featured

Sunday, 06 August 2017 10:45 Written by  இந்நேரம் Published in தொலைகாட்சி Read 2738 times

சென்னை(06 ஆகஸ்ட் 2017): சமூக பொறுப்பற்ற நிகழ்வுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடருமானால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகிவிடுவேன் என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய நாளாக நேற்று அமைந்தது. நடிகர் கமல் நேற்று தொகுத்து வழங்கியபோது திடீரென மன்னிப்பு கேட்டார். அப்போது அவர் சென்ற வாரம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை போல பிக்பாஸ் போட்டியாளர்கள் நடித்ததை சுட்டிக்காட்டி டாஸ்க் கொடுத்தவர்களை கண்டித்த கமல், "டாஸ்க் நான் கொடுப்பதில்லை, மனநலம் குன்றியவர்கள் பற்றி கேலியாக நடித்து காட்டப்பட்டது ரசனைக்குரியதாக இல்லை, எனக்கு கோபமே இருக்கிறது. என் படங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவன் காமெடியனாக இருக்கமாட்டான், அவன் தான் கதாநாயகனாக இருப்பான். "எனக்கு சமூக அக்கறை உள்ளது, இதுபோல் இனி நடக்காமல் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், அப்படி நடந்தால் இந்த நிகழ்ச்சி எனக்குமுக்கியமில்லை (வெளியேறிவிடுவேன்)" என கமல் கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு செட்டப் நிகழ்ச்சி என்ற கருத்து நிலவி வந்தாலும், நடிகர் கமலின் இந்த நேர்மையான பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது.

Movie demigod Kamal Haasan began the Saturday’s episode with a warning to showrunners. He threatened to quit the show as its host, should they include a socially irresponsible task in the future

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.