பிக்பாசில் நுழையும் இன்னொரு பிரபலம் யார் தெரியுமா? Featured

Friday, 11 August 2017 12:57 Written by  இந்நேரம் Published in தொலைகாட்சி Read 1018 times

சென்னை(11 ஆகஸ்ட் 2017): விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னொரு பிரபலமாக தொகுப்பாளினி டி.டி. எனப்படும் திவ்ய தர்ஷினி வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் டிவியில் ஒலிபரப்பாகிவரும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவும், ஜூலியும் வெளியானதை அடுத்து நிகழ்ச்சி டல்லடிக்க தொடங்கியுள்ளது.

இதனை உணர்ந்த நிகழ்ச்சி நடத்துனர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த மேலும் சில பிரபலங்களை உள் நுழைக்க முயன்று வருகின்றனர். இன்னும் 50 நாட்களுக்கு மேல் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் நிரந்தரமாக ஆட்கள் வீட்டில் இல்லாவிட்டாலும், விருந்தினர்கள் போல் சிலரை பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைத்து சுவாரஸ்யம் காட்ட முடிவெடுத்துள்ளனர். அதற்காக விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டி.டி.யிடமும் இன்னும் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகைகளிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Last modified on Friday, 11 August 2017 12:59
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.