ஆபாசத்தின் உச்சம் - தொலைக்காட்சி தொடர்கள் மீது பரபரப்பு புகார்! Featured

சென்னை: தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களில் ஆபாசம் மிகைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஒருகாலத்தில் மாமியார்,மருமகள் என்ற குடும்ப பின்னணியில் அமைந்த கதைகளே தொலைக்காட்சிகளில் தொடராக வந்தது. ஆனால் தற்போது வெளியாகும் தொடர்களில் நவீனம், நட்பு என்ற பெர்யரில் ஆபாசம் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குடும்ப பின்னணியில் ஒரு தொலைக்காட்சி தொடர்களை வெளியிட்டு வந்ததால் அதற்கு போட்டியாக இன்னொரு தொலைக்காட்சி நட்புக்கு முன்னுரிமை கொடுத்து  தொடர்களை வெளியிட்டு வந்தது.  ஆனால் தற்போது வெளியாகும் பிரபல தொடர்களில் ஆபாசம் அதிகம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

அதேபோல மூட நம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், தொலைக்காட்சி தொடர்கள் அமைந்துள்ளதால் எந்த தொடர்களையும் குடும்பத்துடன் பார்க்க இயலவில்லை என்று பலர் முகம் சுழிக்க ஆரம்பித்துள்ளனர்.

Rate this item
(0 votes)
Last modified on Saturday, 25 July 2015 00:01