பாலியல் புகாரில் சன் டிவி சி.ஓ.ஓ.கைது! Featured

சென்னை: பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் சன் டிவி சி.ஓ.ஓ கைது செய்யப்பட்டுள்ளார்.

சன் நெட்வொர்க் நிறுவனத்தின் சி.ஓ.ஓ.-வாக பணியாற்றி வருபவர் பிரவீண் சதங்கதோடி சூர்யா தொலைக்காட்சி நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார்.

இவர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அவருக்குச் சேர வேண்டிய சம்பளம், பி.எஃப். என சுமார் ரூ.35 லட்சத்தை கொடுக்காமல் இழுத்தடித்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் சென்னை நகர காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பிரவீண் சதங்கதோடி நேற்று அவரது இல்லத்தில் மத்திய குற்றப் பிரிவு காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Rate this item
(0 votes)
Last modified on Saturday, 27 December 2014 21:51