பீகார் : பீகாரில் லாலு-நிதிஷ் குமார் கூட்டணியை எதிர்கொள்ள இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியுடன் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி வைத்துள்ளது. 

தெலுங்கானா : "ஓட்டுக்கு நோட்டு கொடுத்த சந்திரபாபு நாயுடு ஒரு திருடன்" என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

கோழிக்கோடு : கேரளாவிலுள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடையே நடந்த மோதலில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர் ஒருவர் கொல்லப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மர் : "இந்திய இராணுவம் மியான்மருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தவில்லை; இந்திய எல்லைக்குள்ளேயே தாக்குதல் நடந்தது" என மியான்மர் அரசு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனே : தேர்தல் ஆணையத்துக்குச் சமர்ப்பித்த ஆவணத்தில் கல்வி தரம் குறித்து பொய்த் தகவல் கொடுத்ததாக பாஜக அமைச்சர் ஒருவர் மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது.

பெங்களூரு : தலையில் ஸ்கார்ப் அணிந்து பள்ளிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்துள்ளது பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பு உருவாகியுள்ளது.

புது டெல்லி : நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸைத் தொடர்ந்து, பிரபல நிறுவனமான ஸ்டார் பக்ஸின் சாக்லேட்கள் மற்றும் சர்க்கரை பாகிற்கு(syrup) தடை விதிக்கப்பட்டுள்ளது.

புது டெல்லி : சர்க்கரை ஆலைகளுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

புது டெல்லி : ரயிலில் பயணம் செய்ய டிக் புக் செய்து இடம் கிடைக்காதவர்களுக்குக் குறைந்த செலவில் விமானத்தில் பயணம் செய்யும் திட்டம் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது.

வாரணாசி: "சூரிய நமஸ்காரம் பிடிக்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறட்டும், இல்லை என்றால் கடலில் விழுந்து மூழ்கட்டும்" என்று பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் கூறியுள்ள கருத்தால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!