கோவை (28 நவ 15) ஐ.டி.பி.ஐ வங்கியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை எதிர்த்து கோவையில் ஐ.டி.பி.ஐ வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பதி(27 நவ.2015): ஏர் இந்தியா மேலாளரை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை(27 நவ.2015): நடிகர் அமீர்கான் இந்தியாவில்தான் இருப்பார் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் (27-11-15): உலக ஹாக்கி லீக் தொடர் சத்தீஸ்கர் மநிலம் ராய்ப்பூரில் இன்று மாலை ஆரம்பமாகிறது.

மும்பை (27-11-15): மும்பையில் 15 வயது பள்ளி மாணவியை வன்புணர்வு செய்து அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட 4 சிறுவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

ஜபல்பூர்(27 நவ.2015): நடிகர் அமீகானை கிண்டலடித்ததால் மனம் உடைந்த ரசிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுடெல்லி (26-11-15): போட்டிகள் நடத்தப்படும் நடைமுறையை மாற்றி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பள்ளி அளவில் விளையாட்டு போட்டி நடத்த விளையாட்டு ஆணையத்தின் முடிவுக்கு முன்னாள் ஓட்டபந்தைய வீராங்கனை பி.டி.உஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாட்னா(27 நவ.2015): பீகாரில் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மது விலக்கு அமுல்படுத்தப்படும்’’ என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

லுதியானா (26 நவ 15): இந்தி நடிகர் அமீர்கான் கன்னத்தில் அறைபவருக்கு ரூ 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிவசேனா அறிவித்துள்ளது.

புது டில்லி (26-11-15): மாமியாரின் தொந்தரவு தாங்க முடியாமல்,  "ஆரோக்கியமான மாமியார் விற்பனைக்கு"  என்று ஆன்லைனில் மருமகள் விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...