புது டெல்லி : "ஊழல் புகாரில் சிக்கி தலைமறைவாக வாழும் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பதவி விலக மாட்டார்கள்" என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

புது டெல்லி : நாடெங்கிலும் 6 புதிய ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

மும்பை : "பாரதீய ஜனதா கட்சியில் 75 வயது கடந்த மூத்தத் தலைவர்களை மூளைச்சாவு அடைந்தவர்களாக தற்போதைய தலைமை கருதுகிறது" என பிரதமர் மோடிக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

புது டெல்லி : வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனங்களில் 2406 நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புனே : மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கும் பங்கஜா முண்டே மீது ரூ. 200 கோடி ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளஹ்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி : கொச்சியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் அசந்து தூங்கிய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை அருகிலிருந்தோர் தட்டி எழுப்பி அழைத்துச் சென்றதாக மலையாள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. 

புது டெல்லி : யோகாவை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் அதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புது டெல்லி : மிக உயர்தரமான உணவுகள் மக்கள் வரிப்பணத்தில் சுமார் 150 சதவீதம் மானியமாக எம்.பிக்கள் உண்டு கொழிக்கின்றனர் என்ற தகவல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவலில் வெளியாகி பொது மக்களிடையே பெருத்த அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

புது டெல்லி : "தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

புது டெல்லி : மது அருந்தி வாகனம் ஓட்டியது உறுதி செய்யப்பட்டால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...