புவனேஸ்வர்: ம.பி தேர்வு வாரியமான வியாபம் ஊழல் விவகாரத்தில் மீண்டும் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

ஆந்திரா: மோடி ஆட்சியில் சகிப்பு தன்மை குறைந்து விட்டதாகவும், வகுப்புவாத சக்திகளின் ஆதிக்கம் பெருகி விட்டதாக புகார் கூறியும், பிரபல எழுத்தாளர்கள் குல்பர்சி உள்பட 3 பேர் கொல்லப்பட்டதை கண்டித்தும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை மத்திய அரசிடம் திருப்பி ஒப்படைத்து வருகிறார்கள். இதுவரை 23 பேர் விருதுகளை திருப்பி ஒப்படைத்து உள்ளனர்.

புது டெல்லி: இந்தியா-ஆப்ரிக்கா நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இந்த மாதம் 26-ம் தியதி புது டெல்லியில் தொடங்கயிருக்கிறது.

புது டெல்லி: சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஸ்ரீநகர்(18 அக்.2015): இந்தியாவில் நடக்கும் மதவாத அரசுக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் இருந்து எம்.பி.ஏ.பட்டம் வாங்க காஷ்மீர் மாணவர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புவனேசுவரம்: பசுவைக் கொல்பாவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க.எம்பி சாக்‌ஷி மகராஜ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை(18 அக்.2015): ரூபாய் 30 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை மகாராஷ்ட்டிரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பை: இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் சென்னை அணி 2-வது முறையாக வெற்றி பெற்றது.

கேரளா: பாலக்காடு, அட்டப்பாடி கடுகுமண்ணயிலுள்ள ஆதிவாசி கிராமத்தில் காவல்துறையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது டெல்லி(17 அக். 2015): ரயில்களில் தரம் குறைந்த தண்ணீரை விற்பனை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, வடக்கு ரயில்வே அதிகாரிகள் இருவர் மீதும், டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 7 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...