பிர்பம் : திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வரும் வழியில் கடத்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த விதவைப் பெண்ணை, 8 கொடூரர்கள் கூட்டாக வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா : யோகாவுக்கு மதச்சாயம் பூசி மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க் : "கடுமையான பருவமழை பற்றாக்குறை இருந்தபோதும் 7 சதவீத வளர்ச்சியை எட்ட முடிந்தது எனில், 10 சதவீத வளர்ச்சி சாத்தியமற்ற ஒன்றல்ல" என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

புது டெல்லி : "பயங்கரவாதிகள் தங்கள் அறிவைக் கட்டுப்படுத்த யோகா செய்ய வேண்டும்" என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

மலாட் : மும்பையில் விஷச் சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புது டெல்லி : "ஜனநாயகத்தைப் பாதுகாக்க பதவியில் இருப்பவர்களின் உறுதிப்பாடுதான் இப்போதைய தேவை. ஆணவமே சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும்; அதிகாரத்தில் இருப்பவர்கள் அடக்கமாக இருக்க வேண்டும்" என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி மோடிக்கு எதிராக மீண்டும் கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.

அகமதாபாத் : பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆசாரம் பாபுவுக்காக ஆறாவது முறையாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சமர்ப்பித்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

புது டெல்லி : ஊழல் வழக்கில் சிக்கி லண்டனில் தலைமறைவாக வாழ்ந்துவரும் லலித் மோடிக்கு உதவியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவி விலக கோரி ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் அவரது வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு : வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சாதகமான தீர்ப்பை எதிர்த்து வரும் திங்கள்கிழமை கர்நாடகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.

ஹைதராபாத் : 7 வயது சிறுமியை வன்புணர்ந்து படுகொலை செய்த வெறியனைக் காவல்துறையினர் முன்னிலையிலேயே பொதுமக்கள் கல்லால் எறிந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...