மும்பை: மும்பையில் பெயதுவரும் பலத்த மழை காரணமாக மும்பை புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

புது டெல்லி : டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் : கேரளத்தில் அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயரும், அவரது காதலர் பிஜூ ராதாகிருஷ்ணனும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

புது டெல்லி : இந்தியாவில் மீண்டுமொரு அவசரநிலை வர வாய்ப்புள்ளது எனக்கூறிய பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானியின் கருத்தை கெஜ்ரிவால், நிதிஷ்குமார் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

புது டெல்லி : குஜராத் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சங்கர் சிங் வகேலாவுக்கு எதிராக நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புது டெல்லி : "இந்தியாவில் மீண்டும் ஒரு அவசர நிலை வராது என உறுதியாக கூற முடியாது" என பாரதீய ஜனதா கட்சி தலைவர் எல்.கே.அத்வானி மோடிமீது மறைமுகமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

திருவனந்தபுரம் : "தமிழகத்தில் விளையும் காய்கறிகளில் பயன்படுத்தப்படும் அதிகப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தமிழக அரசுக்கு கேரள அரசின் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரூ : யோகாவை பள்ளிகூடங்களில் கட்டாயமாக்குதல் குறித்த சர்ச்சை ஓயாத சூழலில் யோகா என்பது பணக்காரர்களுக்கும் சோம்பேறிகளுக்குமானது என்று கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள வயநாடு பேருந்து நிலைய பொது தொலைக்காட்சியில் திடீரென ஆபாசப் படம் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

புது டெல்லி : விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் மீது புகார் எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...