பெங்களூரு (27 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை கர்நாடக பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (26 ஏப் 2019): கோமியத்தால்தான் பிரக்யா சிங் தாகூரின் புற்று நோயை குணப்படுத்தியது என்ற பரப்புரையில் உண்மை இல்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தெரிவித்துள்ளார்.

வாரணாசி (26 ஏப் 2019): புதிய இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (25 ஏப் 2019): மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்க் தாகூரை எதிர்த்து ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி போட்டியிடுகிறார்.

லக்னோ (25 ஏப் 2019): உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி (24 ஏப் 2019): குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கீஸ் பானுவின் மகள் வழக்கறிஞராக விரும்புவதாக பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (24 ஏப் 2019): என் டி திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் (23 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் 75 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

புதுடெல்லி (23 ஏப் 2019): குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம் (23 எப் 2019): கேரளாவில் காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு செல்வதாக எழுந்த புகாரை அடுத்து அங்குள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...