வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்ட பத்திரிகையாளர் ட்விட்டர் பக்கம் முடக்கம்!

பிப்ரவரி 01, 2018 583

புதுடெல்லி (01 பிப் 2018): வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்ட பத்திரிகையாளர் ஜாக்ரதி சுக்லா ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

பிரபல பத்திரிகையாளர் ஜாக்ரதி சுக்லா. இவர் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து வருவார். இந்நிலையில், இவர் சமீபத்தில் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டிருந்தார். குறிப்பாக முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும் என்று மதத்தின் பெயரை குறிப்பிடாமல் கூறியிருந்தார்.

இதற்கு நடுநிலையாளர்கள் மட்டுமல்லாமல் சக பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.

இதனை அடுத்து ட்விட்டர் நிறுவனம் அவரது ட்விட்டர் பக்கத்தை முடக்கியுள்ளது. அவரது சர்ச்சைக்குரிய பதிவுகள் நீக்கம் செய்யப்படும்வரை அவரது ட்விட்டர் முடக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.

சமீபத்தில் காச்கஞ்ச் கலவரத்திற்கும் சில பத்திரிகையாளர்களின் போலி பதிவுகளே காரணம் என கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...