மத்திய பட்ஜெட்: 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ 5 லட்சம் மருத்துவ காப்பீடு

பிப்ரவரி 01, 2018 549

புதுடெல்லி (01 பிப் 2018): மத்திய பட்ஜெட்டில் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ செலவுக்காக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அமசங்கள் வருமாறு:-

* வயதான பெண்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* நாடு முழுவது 24 அரசு மருத்துவ கல்லூரிகள் புதியதாக உருவாக்கப்படும்.

* இலவச மருத்துவ வசதி திட்டத்துக்கு ரூ1,200 கோடி.

* உலகின் மாபெரும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* அனைவருக்கும் மருத்துவ நல உதவிகளை நீட்டிக்க நடவடிக்கை.

* நாடு முழுவதும் 1.5 லட்சம் புதிய மருத்துவ நல மையங்கள் அமைக்கப்படும்.

* குஜராத் மாநிலத்தில் ரயில்வே பல்கலை திறக்க திட்டம் .

* 3 நாடாளுன்ற தொகுதிக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை

* காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதம் 500 வழங்கப்படும்.

* புதிய இலவச மருத்துவ வசதி திட்டத்திற்காக சுகாதாரத்துறைக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு; 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ செலவுக்காக வழங்கப்படும். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...