தேசிய கொடியை உயர்த்திப் பிடிக்க தலித் பெண்ணுக்கு தடை விதித்த கும்பல்!

பிப்ரவரி 02, 2018 672

போபால் (02 பிப் 2018): தலித் இனத்தை சேர்ந்த பெண் தேசிய கொடியை உயர்த்திப் பிடிக்கக்கூடாது என்று கூறியதோடு அவர் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசம் ஷாநகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று இந்திய தேசிய கொடியை பிடித்தவாறு கொடியேற்று நிகழ்ச்சிக்கு சென்ற அனிதா என்ற பெண் ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் அவர் தேசிய கொடியை பிடிக்கக் கூடாது என்றும் நீ தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர் என்றும் தகாத வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

இதனால் வேதனையடைந்த அனிதா ஷாநாகர் போலீஸில் இதுகுறித்து புகார் அளித்தார். பத்மாவத் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள்தான் அவரை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், தகாத வார்த்தைகளால் விமர்சித்ததாகவும் அவர் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.


a Dalit woman Sarpanch was not allowed to unfurl national flag. This incident occurred in a village which comes under Shahnagar Police station.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...