குஜராத்தில் மேலும் சரிவை சந்தித்த பாஜக!

பிப்ரவரி 20, 2018 588

ஆமதாபாத்(20 பிப் 2018): குஜராத் நகராட்சி தேர்தல்களில் பாஜக முன்பை காட்டிலும் மேலும் சரிவை சந்தித்துள்ளது.

குஜராத்தில் மொத்தம் 75 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. அதில் பாஜக 47 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. 6 இடங்களில் எவருக்கும் பெரும்பான்மை கிடையாது. 4 இடங்களில் சுயேச்சைகளும், 2 இடங்களில் மற்றவர்களும் வெற்றிபெற்றிருக்கின்றனர்.

2013 ல் நடைபெற்ற தேர்தலில் 79 நகராட்சிகளில் 59ஐ பாஜக பெற்றிருந்தது. இப்போது அது 47ஆக சரிந்துள்ளது. அப்போது வெறும் 11 இடங்களை பெற்ற காங்கிரஸ் தற்போது 16 இடங்களை கைபற்றியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைத்தபோதும், பெரும் சரிவை சந்தித்த பாஜகவுக்கு நகராட்சி தேர்தல் முடிவுகளும் திருப்திகரமானதாக இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...