இந்தியா வந்துள்ள கனடா பிரதமரை மோடி புறக்கணிக்க காரணம் இதுதானா?

பிப்ரவரி 20, 2018 755

புதுடெல்லி(20 பிப் 2018): இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி கண்டுகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் இந்தியாவில் அவர் பிரதமர் மோடியால் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதுவரை எந்த நாட்டு பிரதமரு இவ்வாறு புறக்கணிக்கப்படவில்லை என்ற நிலையில் கனடா பிரதமர் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தாஜ் மஹால் உள்ளிட்ட பல இடங்களுக்கு அவரது குடும்பத்தினர் சென்றபோது இந்திய அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பலராலும் அவர் புறக்கணிப்புக்கு உள்ளானார்.

அவர் டெல்லி வந்து சேர்ந்தபோது கீழ்நிலையில் உள்ள அமைச்சரான வேளாண்மைத் துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வரவேற்றது அவரை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி பல தருணங்களில் இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை நேரில் சென்று வரவேற்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். தனது வெளிநாட்டு சகாக்களை அவர் கட்டியணைத்து வரவேற்கவும் செய்வார்.

மிகச் சமீபமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் நேரில் சென்று, விமான நிலையத்தில் கட்டியணைத்து வரவேற்றார். ஆனால், கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து இரண்டு நாட்கள் ஆகியும் மோடி அவரை இன்னும் நேரில் சந்திக்கக் கூட இல்லை. திங்களன்று பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு ட்ரூடோ சென்றபோது, அங்கும் பிரதமர் மோதி செல்லவில்லை.

பிரதமர் மட்டுமல்ல, ஞாயிறன்று ட்ரூடோ தாஜ் மஹால் சென்றபோது, அந்த உலகப் பாரம்பரிய சின்னம் அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரும் அவரைச் சந்திக்கவில்லை.

இந்நிலையில் கனடா பிரதமரை புறக்கணிக்க காரணம் சீக்கிய தீவிரவாத அமைப்புகளுக்கு கனடா வழங்கும் ஆதரவு. சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு கேட்டு போராடும் இனக்குழுக்களுக்கு கனடா பிரதமர் ஆதரவு அளிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. கனடாவில் சீக்கியர்கள் கணிசமாக வாழ்கிறார்கள், கடந்த ஆண்டு ஏப்ரலில் கனடா தலைநகர் டொரான்டோவில் நடைபெற்ற 'கல்சா டே' பேரணியில் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். தீவிர சீக்கிய இனவாத குழு ஏற்பாடு செய்த அந்த பேரணியில் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றதற்கு ஏற்கனவே இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், கனடா பிரதமர் புறக்கணிப்புக்கு இதுதான் காரணமாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

அதேவேளை ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு கேவலப்படுத்தப்படுவது இந்தியாவின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


Canadian Prime Minister Justin Trudeau’s first official visit to India has not been the love fest many expected it to be. Instead, it has led to speculation in the media, both in Canada and India, that the Indian government accorded him a lukewarm reception because of his alleged support of Sikh separatist Khalistani groups in his country.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...