நீரவ் மோடியின் மோசடியில் தொடர்புடைய பஞ்சாப் நேஷனல் வங்கி பொது மேலாளர் கைது!

பிப்ரவரி 21, 2018 709

புதுடெல்லி(21 பிப் 2018): பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் ராஜேஷ் ஜிந்தால் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11,400 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்து வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்.

இந்நிலையில் நிரவ் மோடியின் நிறுவனத்தில் நிதிநிலவரங்களைக் கையாண்டு வந்த உயரதிகாரி விபுல் அம்பானி உட்பட 5 அதிகாரிகளை சிபிஐ நேற்று கைது செய்தது.

இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் பொறுப்புக்கு இணையான அந்தஸ்து கொண்ட அதிகாரியான ராஜேஷ் ஜிந்தாலை சிபிஐ கைது செய்துள்ளது.

he CBI, which has already arrested five Punjab National Bank officials, has turned its attention to the role of senior executives of the private firms for the massive bank frauds linked to companies run by billionaire designer Nirav Modi and his uncle Mehul Choksi.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...