இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கிலிருந்து டிஜிபி பாண்டே விடுதலை!

பிப்ரவரி 21, 2018 670

ஆமதாபாத்(21 பிப் 2018): இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கிலிருந்து முன்னாள் டிஜிபி பாண்டேவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி மும்பையை சேர்ந்த 19 வயது இஷ்ரத் ஜஹான் மற்றும் ஜாவித் ஷேக், அம்ஜத்அலி அக்பரலி ரானா, ஜீஷான் ஜோஹர் ஆகியோர் மோடியை கொலை செய்ய வந்ததாக கூறி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இது போலி மோதல் தாக்குதல் என்று தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் டிஜிபி பாண்டே கைது செய்யப்பட்டார். பின்பு பிணையில் விடுதலையானார்.

இந்நிலையி ஆமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாண்டேவை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இஸ்ரத் ஜஹானை கொலை செய்ததற்கு பாண்டே மீது எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி சிபிஐ நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

A special CBI court on Wednesday discharged former Gujarat in-charge DGP P P Pandey in the alleged 2004 fake encounter of Ishrat Jahan and three others, in which he was an accused.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...