டெல்லி ஜும்மா மசூதியில் கனடா பிரதமர்!

பிப்ரவரி 22, 2018 605

புதுடெல்லி(22 பிப் 2018): கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அவரது குடும்பத்தினருடன் டெல்லி ஜும்மா மசூதிக்கு வருகை புரிந்தார்.

ஒரு வார காலமாக இந்தியாவில் முகாமிட்டுள்ள கனடா பிரதமர் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய இடங்களை பார்வையிட்டு வருகிறார். கடந்த வாரம் தாஜ்மஹால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற ஜஸ்டின் ட்ருடோ இன்று வியாழக்கிழமை டெல்லி ஜும்மா மசூதிக்கு வருகை புரிந்தார். அவருடன் கனடா பாதுகாப்பு அமைச்சர் ஹஜிரித் சச்சானும் உடனிருந்தார்.

வெளிநாட்டிலிருந்து எந்த தலைவர்கள் வந்தாலும் விமான நிலையம் ஓடிச் சென்று வரவேற்பளிக்கும் பிரதமர் மோடி கனடா பிரதமரை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இதுகுறித்து எந்த சலனமும் இல்லாமல் கனடா பிரதமர் இந்தியாவில் பல இடங்களுக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

Canadian Prime Minister Justin Trudeau on Thursday arrived at Jama Masjid here, along with wife and children. Canadian Defence Minister Harjit Sajjan was also present.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...