ஆர்.எஸ்.எஸ். சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட மேற்கு வங்க மம்தா அரசு முடிவு!

பிப்ரவரி 23, 2018 975

கொல்கத்தா(23 பிப் 2018): ஆர்.எஸ்.எஸ்.சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவிக்கையில், "மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் பாடம் நடத்துவதற்கு பதிலாக கம்பு ,சிலம்பம் மேலும் சில பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற பயிற்சிகள் அளிக்கக்கூடாது என்று ஏற்கனவே அரசு எச்சரித்துள்ளது ஆனால் ஆர்.எஸ்.எஸ்.சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் அதனை மீறி வருகின்றன." என்றார்.

மேலும் பள்ளிகள் கல்வியை பரப்புவதற்காகத்தான் உள்ளது. மத சடங்குகளை பரப்புவதற்கல்ல என்றும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து இதுபோன்று பயிற்சிக்கு அனுமதி இல்லாமல் செயல்படும் சுமார் 125 பள்ளிகள் மூடப்படும் என்றும் மேலும் 493 பள்ளிகள் கண்காணிப்பில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே சம்மந்தப்பட்ட 125 பள்ளிகளுக்கு மம்தா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் மம்தா அரசின் இந்த முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

The West Bengal government has issued notices to shut some 125 schools, alleging that the Rashtriya Swayamsevak Sangh runs them.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...