கடும் விமர்சனத்தை அடுத்து பிரதமர் மோடி கனடா பிரதமரை சந்திக்கிறார்!

பிப்ரவரி 23, 2018 744

புதுடெல்லி(23 பிப் 2018); கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இந்திய பிரதமர் மோடி உரிய மரியாதை அளிக்கவில்லை என்று விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி, கனடா பிரதமரை சந்திக்கவுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்றார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நேற்று மீண்டும் டெல்லி திரும்பிய கனடா பிரதமர் டெல்லி ஜும்மா மசூதிக்கு சென்றார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், இன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நாளை(இன்று) சந்தித்து பேசுவதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். ” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக குடியரசு தலைவர் மாளிகைக்கு கனடா பிரதமர் வருகை புரிகிறார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமரை மத்திய அரசு புறக்கணிப்பதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிரதமர் மோடி- ட்ரூடே இடையேயான சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Canadian Prime Minister Justin Trudeau, at the Rashtrapati Bhavan, receives Guard of Honour before he met Prime Minister Narendra Modi

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...