ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற சிறுமியை ஆபாசமாக முத்தமிட்டு சிக்கிக்கொண்ட பாடகர்!

February 23, 2018

மும்பை(23 பிப் 2018): பாடகர் பாப்பான் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்கும் சிறுமியை முத்தமிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் பாடல் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் சிறுமிகளுடன் பாடகர், இசையமைப்பாளர் பாப்பான் ஹோலி பண்டிகை கொண்டாடியபோது சிறுமியை ஆபாசமான முறையில் முத்தமிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ருனா புயான் பாடகர் பப்பான் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிறுமியை இவ்வாறு முத்தமிடுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரபல பாடகரிடமிருந்து இவ்வாறான ஒரு செயலை நான் எதிர் பார்க்க வில்லை. இது மிகவும் தண்டிக்கத்தக்கது." என்று தெரிவித்தார்.

Singer-composer Papon's Holi celebrations with the contestants of a music reality show that he is part of have led to a complaint that accuses him of "inappropriately kissing" a minor girl.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!