நீரவ் மோடி, விக்ரம் கோத்தாரியை தொடர்ந்து இன்னொரு வங்கி மோசடி அம்பலம்!

பிப்ரவரி 25, 2018 810

புதுடெல்லி(25 பிப் 2018): நீரவ் மோடி விக்ரம் கோத்தாரி வங்கி மோசடியை தொடர்ந்து துவாரகா தாஸ் சேத் என்ற மற்றொரு வைர நிறுவனமும் ரூ.390 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, தனது மனைவி ஏமி மோடி, சித்தப்பா மெகுல் சோஸ்கி உள்ளிட்டோருடன் சேர்ந்து, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 700 கோடி அளவிற்கு மிகப்பெரும் மோசடியை அரங்கேற்றினர். இதனால் அந்த வங்கி திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ, நீரவ் மோடி நிறுவன ஊழியர்கள் சிலரை கைது செய்துள்ளனர்., நீரவ் மோடியைப் பிடிக்க இண்டர்போல் போலீசாரின் உதவியை சிபிஐ நாடியுள்ளது.

நீரவ் மோடி மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே ரோடோமேக் பேனா நிறுவன முதலாளி விக்ரம் கோத்தாரி ரூ. 3 ஆயிரத்து 695 கோடி அளவிற்கு வங்கிகளில் மோசடி செய்திருப்பது வெளியே வந்தது. சிபிஐ அதிகாரிகள் இவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘துவாரகா தாஸ் சேத்’ என்ற வைர நிறுவனம், அரசு பொதுத்துறை நிறுவனமான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் ரூ.390 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ‘துவாரகா தாஸ் சேத்’ நிறுவனத்தின் இயக்குநர்கள் சாப்யா சேத், ரீட்டா சேத், கிருஷ்ண குமார் சிங், ரவி சிங் ஆகியோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் நிதி மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

The CBI booked recently a Delhi-based jewellery exporter and directors of two firms on the charge of cheating the Oriental Bank of Commerce (OBC) of ₹389.85 crore in connivance with some bank officials and some shady financial institutions six months after the bank lodged a complaint. The main accused has been missing for over a year.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...