கேரளா பழங்குடி இளைஞர் மது படுகொலையும் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் ஈனச்செயலும்!

பிப்ரவரி 25, 2018 1678

திருவனந்தபுரம்(25 பிப் 2018): கேரள மாநிலத்தில் உணவுப் பொருட்களை திருடினார் என்று குற்றம் சாட்டப்பட்டு பழங்குடியினத்தை சேர்ந்த மது என்பவர் வன்முறை கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை குறித்து பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். குறிப்பாக இந்த படுகொலையை அனைத்து சமூகத்தினரும் எதிர்த்தனர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து பதிவு செய்த கிரிக்கட் வீரர் சேவாக், “மதுவின் படுகொலையை சுட்டிக்காட்டியதோடு அவரை உபைத், ஹுசைன் அப்துல் கரீம் ஆகியோர் அடங்கிய கும்பதான் கொன்றது என்று மத மோதலை தூண்டும் வகையில் பதிவிட்டிருந்தார்.

இதனை அடுத்து ஷேவாக் மட்டுமல்லாமல் மேலும் சிலரும் இதுபோன்று பதிவிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் கேரள அரசு இதற்கு இடமளிக்காமல் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்தததோடு, ரூ 10 லட்சம் நிதியுதவியும் மதுவின் குடும்பத்திற்கு அறிவித்தது.

இதற்கிடையே சேவாக்கின் பதிவிற்கு பதில் அளித்த கேரள பத்திரிகையாளர் ஸ்னேஹா கோஷி, “குற்றவாளிகளின் ஒரு மதத்தாரின் பெயர்களை மற்றும் குறிப்பிடுவதே ஒரு குற்றம். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரின் பெயர்களில் முஸ்லிம் அல்லாதோரும் உள்ளனர் என குறிப்பிட்டிருந்தார். மேலும் பலர் சேவாக்கின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.இதனை அடுத்து சேவாக் தனது பதிவுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

மாட்டிறைச்சியை காரணம் காட்டி பல முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது சேவாக்கிற்கு வராத உணர்வு இப்போதுமட்டும் வந்தது ஏனோ? என்று பலரும் சேவாக்கை விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையே கொல்லப்பட்ட மதுவின் சகோதரி காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், வனத்திலுள்ள குகை ஒன்றில் மறைந்திருந்த தம் சகோதரன் மதுவை ஊர் மக்களுக்கு வினோத் என்பவரே காட்டி கொடுத்தார் என்றும் அதனைத் தொடர்ந்து அக்குகையினைச் சூழ்ந்த ஊர் மக்கள் மதுவினைப் பிடித்து ஓடிவிடாமல் இருக்க கால்களைக் கயிறுகளால் கட்டினர் என்றும் இதற்கிடையில் கூட்டத்திலிருந்த சிலர் அடிக்க தொடங்கியதும் கூட்டம் முழுவதும் சேர்ந்து தம் சகோதரனைத் தாக்கியதாகவும் தெரிவித்தார்.இந்த வாக்குமூலத்தால் சிலரது வன்முறை எண்ணம் தவிடு பொடியானது.

இவ்விவகாரத்தில் மேலும் விசாரணை முடுக்கிவிடப்படும் என்று கேரள அரசு உறுதியளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...