ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

பிப்ரவரி 26, 2018 717

புதுடெல்லி(26 பிப் 2018): தென் மாநிலத்தை சேர்ந்த ஒரு ஆளுநர் மீது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாலியல் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தென்மாநிலம் ஒன்றில் இருக்கும் ராஜ்பவனில் பணியாற்றும் பெண் ஒருவரை, ஆளுநரானவர் பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சித்ததாகவும், தொடர் தொல்லை காரணமாக ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்றின் ஆளுநர் மீது மத்திய விசாரணைக் குழு பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்து வருகிறது.

மேலும் புகார் பெண் ஊழியர் அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தால், குறிப்பிட்ட அந்த ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த ஆளுநர் யார் என்ற தகவலை வெளியிட உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.

இதனை அடுத்து அந்த தென் மாநில ஆளுநர் யார் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...