விவசாயிகள் பெயரில் வங்கிக் கடன்: மத்திய அரசின் ஊழல் அம்பலம்!

பிப்ரவரி 26, 2018 823

லக்னோ(26 பிப் 2018): விவசாயிகள் பெயரில் மத்திய அரசு சர்க்கரை ஆலை ஒன்றிற்கு மத்திய அரசு ரூ. 109 கோடி அளவிற்கு கடன் வழங்கியதில் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள சிம்போஹோலி சர்க்கரை ஆலைக்கு, விவசாயிகள் பெயரில் ரூ. 109 கோடி அளவிற்கு கடன் வழங்கிய மத்திய அரசு அதனை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்குப் பிரித்துத் தராததுடன், குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியிலும் திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.

ஏற்கெனவே சிம்ப்ஃஹோலி ஆலை மீது, ரூ. 97 கோடி அளவிற்கான மோசடிப் புகார் இருந்த நிலையில், மோடி ஆட்சிக்கு வந்தபின் புதிதாக இந்த ரூ. 109 கோடி கடனை வழங்கியுள்ளது. மேலும் டெல்லி வைர வியாபாரி துவாரகா தாஸ், ரூ. 389 கோடி மோசடியில் ஈடுபட்ட, ஒரியண்டல் வங்கியிலேயே இந்த மோசடியும் நடந்துள்ளது.

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில், ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி, நாட்டை விட்டு வெளியேறிய ‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ்’ சாராய ஆலை முதலாளி விஜய் மல்லையா, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 700 கோடியைச் சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, ‘ரோடோ மேக்’ பேனா கம்பெனி முதலாளி விக்ரம் கோத்தாரி, 6 வங்கிகளில் ரூ. 3 ஆயிரத்து 695 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதது என்ற நிலையில் தற்போது விவசாயிகள் பெயரில் சர்க்கரை ஆலைக்கு கடன் வழங்கியதிலும் முறைகேடு செய்துள்ளது என பொதுத்துறை வங்கிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்படுத்தியது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...